News
இப்படி ஒரு படமா.. சினிமாவையே மாத்த போறார்! – மாதவனை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்!
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் மாதவன். தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலமாக அறிமுகமானார்

பின்னர் கௌதம் மேனனுடன் “மின்னலே”, பிறகு “டும் டும் டும்”, “கன்னத்தில் முத்தமிட்டால்” என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான “சார்லி” படத்தின் ரீமேக்கான “மாறா” படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாதவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பிராஜன் குறித்து பயோகிராபி படத்தை இயக்கி நடித்தும் வந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.
தற்போது கேன்ஸ் திரைப்பர விழா நடந்து வரும் நிலையில் மாதவனின் “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” படம் அங்கு திரையிடப்பட்டுள்ளது.

அதை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் “இப்போதுதான் கேன்ஸ் விழாவில் ராக்கெட்ரி படத்தை பார்த்தேன். இந்திய சினிமாவில் புதிய குரலை பதிவு செய்வதற்கான அம்பை கையில் எடுத்துள்ளார் மாதவன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படம் விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
