News
நான் விஜய் டிவியை விட்டு விலகுறேன்.. உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா..!
மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகியது அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் பங்கேற்று வரும் பிரபலங்கள் விஜய் டிவியை விட்டு விலகுவது கிடையாது.
ஏனெனில் தொடர்ந்து விஜய் டிவியில் இருப்பதன் மூலம் அவர்களால் அதிக பிரபலம் அடைய முடியும். மதுரை முத்து போன்ற பல பிரபலங்கள் அதனால்தான் விஜய் டிவியில் இன்னமும் இருந்து வருகின்றனர்.
அறந்தாங்கி நிஷா சொன்ன பதில்:
மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலேயே அதிக பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக விஜய் டிவி இருந்து வருகிறது.
அதனை விட்டு வேறு சேனலுக்கு சென்றால் பெரிதாக வரவேற்பு கிடைக்காது இந்த நிலையில் மணிமேகலையை தொடர்ந்து அறந்தாங்கி நிஷா விஜய் டிவியை விட்டு விலகப் போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்க அறந்தாங்கி நிஷா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறேன் அதற்குள் இப்படி ஒரு புரளியை கிளப்புகிறீர்கள் என்று அதற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
