News
நைட் 2 மணிக்கு என் கையை பிடிச்சி.. அஞ்சலி குறித்து பகீர் தகவல் கொடுத்த இயக்குனர்..!
நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதில் இயக்குனர்களின் பங்கு பெரிதாக இருக்கிறது. பல இயக்குனர்கள் பல நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகை அஞ்சலியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராம் என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பே களஞ்சியம் என்கிற இயக்குனர் ஓரிரு படங்களை அஞ்சலியை வைத்து இயக்கி இருக்கிறார்.
நடிகை அஞ்சலி:
அது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அஞ்சலியை வைத்து முதலில் இரண்டு படங்கள் இயக்கினேன். மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் அஞ்சலிக்கு மூன்றாம் பிறை படத்தில் வரும் ஸ்ரீதேவி கதாபாத்திரம் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தேன்.
அது நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் இரவு 2 மணிக்கு எனது கையை பிடித்து பேசிய அஞ்சலி இந்த திரைப்படம் எனக்கு தேசிய விருதை வாங்கி கொடுக்கும் சார் என்றெல்லாம் கூறினார். ஆனால் அந்த படத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.
உடனே இந்த படத்தை விட்டு விட்டு தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டார் அதற்கு பிறகு மீண்டும் வந்து அந்த படத்தில் நடிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார் களஞ்சியம்.
