Tamil Cinema News
தெரியாம அமரன் பத்தி வாய்விட்ட விக்னேஷ் சிவன்.. விளக்கம் கொடுத்த இராணுவ வீரர்.. இது தெரியாம போச்சே..!
சமீபத்தில் தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்தது. அமரன் திரைப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை விடவும் ராஜ்குமார் பெரியசாமிக்கு அதிக அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
அதற்கான அதிகாரப்பூர்வ செய்திகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் அமரன் திரைப்படம் குறித்து தொடர்ந்து சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தின் டிரைலர் வந்ததிலிருந்து சிவகார்த்திகேயன் அந்த படத்தில் தாடி வைத்திருந்தது குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்தது.
அமரன் திரைப்படம்:
ராணுவ வீரர்களுக்கு தாடி வைப்பதற்கு அனுமதி கிடையாது எப்படி சிவகார்த்திகேயன் தாடி வைத்திருப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்றெல்லாம் கேள்விகள் இருந்தது. இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தொடர்ந்து பதில் அளித்து வந்து கொண்டிருந்தார்.
அதேபோல படத்தில் ஏன் முகுந்த் வரதராஜனின் ஜாதி காட்டப்படவில்லை என்கிற ஒரு கேள்வியும் இருந்தது. அதற்குமே கூட ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்து இருந்தார் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இந்த படம் குறித்து ஒரு விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது ஒரு ராணுவ அதிகாரியின் சம்பளத்தை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முகுந்த் வரதராஜனால் அவர்கள் ஆசைப்பட்ட நிலத்தை வாங்க முடியவில்லை நகரத்திற்கு வெளியே குறைந்த விலையில் நிலத்தை வாங்குவதற்கு அவர் திட்டமிடுவது போல காட்சிகள் இருக்கிறது.
விக்னேஷ் சிவன் கருத்து:
உயிரையே பணயம் வைத்து நாட்டுக்காக போராடுபவர்களுக்கு எவ்வளவு வெகுமதிகள் செய்ய வேண்டும். அவர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் நடித்த முகுந்த் வரதராஜனின் நண்பரான இன்னொரு ராணுவ வீரர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இப்பொழுது ராணுவ வீரர்களுக்கான சலுகைகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது.
ஒரு ஹமாம் சோப்பாக இருந்தாலும் கூட பொதுமக்களுக்கு வருவது போல ராணுவ வீரர்களுக்கு வருவது கிடையாது அதன் தயாரிப்பே ராணுவ வீரர்களுக்கு அதிக குவாலிட்டியாக செய்யப்படுகிறது. இப்படி ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா பொருட்களுமே பொதுமக்களில் இருந்து சிறப்பானதாக மாற்றப்பட்டு தான் கொடுக்கப்படுகிறது.
அவர்களுக்கு நிறைய சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இது இல்லாமல் குறைந்தபட்சமாகவே ஒரு ராணுவ அதிகாரிக்கு 2 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியிருந்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்