Tamil Cinema News
அருந்ததி படம் இவ்வளவு வசூல் செஞ்சுதா.. மாஸ்தான் இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!
ஒரு கதாநாயகனுக்கு இருக்கும் மாஸ் காட்சிகள் அனைத்தும் வைத்து ஒரு நடிகைக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அருந்ததி திரைப்படத்தைக் கூறலாம்.
அருந்ததி திரைப்படம் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு திரைப்படமாக இருக்கிறது.
நடிகர் சோனுவிற்கும் கூட அந்த திரைப்படம் முக்கிய திரைப்படம் ஆக இருந்தது நடிகை அனுஷ்காவிற்கு தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்று தந்த படமாக அருந்ததி திரைப்படம் இருக்கிறது.
இந்த நிலையில் அருந்ததி படம் வெளியான காலகட்டத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து எவ்வளவு வசூல் செய்தது என்பது பலரும் அறியாத விஷயமாகும். 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் இப்பொழுது உலக அளவில் மொத்தமாக 68.50 கோடி வசூல் செய்து இருக்கிறது.
அப்போதைய ரூபாய் மதிப்போடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 150 கோடிக்கும் அதிகமான ஒரு வசூல் என்று கூறலாம். தமிழ்நாட்டில் மட்டும் அப்போதே 11.50 கோடி வசூல் செய்துள்ளது இந்த படம்.
