நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
சமீபத்தில் ஆர்யா இந்த படம் குறித்து அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சார்பட்டா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்க இருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஆர்யா தற்சமயம் பெரிதாக மீசையை வளர்த்து வருகிறார். அதை வைத்து பார்க்கும் பொழுது சார்பட்டா 2 பரம்பரை சீக்கிரமே துவங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







