News
அசோக் செல்வனுக்கு மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு!.. எல்லாத்துக்கும் ஜெயம் ரவிதான் காரணமா?..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பொதுவாகவே மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும் நடிகர்களே வரவேற்பு தெரிவிப்பது உண்டு. ஏனெனில் அவரது திரைப்படங்களில் நடிப்பதே இவர்களது மார்க்கெட்டை உயர்த்திவிடும் என நடிகர்கள் நம்புகின்றனர்.
அதனால்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட பெரும் நட்சத்திர பட்டாளமே குறைந்த சம்பளத்திற்கு படத்தில் நடித்து கொடுத்தது. அது த்ரிஷா மாதிரியான பிரபலங்களுக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. எனவேதான் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.

ஆனால் எல்லா நடிகர்களுக்கும் மணிரத்தினத்தோடு ஒத்து வருவதில்லை. நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஏற்கனவே தக் லைஃப் திரைப்படத்தில் இருந்து விலகி விட்டனர். இதனையடுத்து தற்சமயம் சிம்பு அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வனும் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தைதான் அசோக் செல்வனுக்கு தர போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
