Connect with us

3000 கோடி பட்ஜெட்.. சல்மான்கானை வைத்து களம் இறங்கும் அட்லீ. ஆனால் ஹீரோ நம்ம தமிழ் நடிகர்..

salmankhan atlee

News

3000 கோடி பட்ஜெட்.. சல்மான்கானை வைத்து களம் இறங்கும் அட்லீ. ஆனால் ஹீரோ நம்ம தமிழ் நடிகர்..

Social Media Bar

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லிக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. தமிழ் மொழியிலேயே அவரது முதல் திரைப்படமான  ராஜா ராணி திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கிய தெறி, மெர்சல் மாதிரியான எல்லா படங்களுமே தமிழில் நல்ல வெற்றியை கொடுக்கும் படங்களாகவே இருந்தன. ஆனால் தொடர்ந்து அவர் எடுக்கும் திரைப்படங்களின் காட்சிகள் ஹாலிவுட் சினிமாவில் இருந்து திருடப்பட்டவை என்று கூறப்பட்டிருந்தன.

அட்லிக்கு வரவேற்பு:

அதற்கு தகுந்தார் போல மெர்சல் திரைப்படத்தில் எக்கசக்கமான காட்சிகள் ஹாலிவுட் திரைப்படங்களின் தழுவலாக இருந்தது இதன் காரணமாக கோலிவுட்டை விட்டு பாலிவுட் சென்ற அட்லி அங்கு நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை தொடங்கினார்.

atlee
atlee

ஜவான் திரைப்படத்தைப் பொறுத்தவரை வெகு காலங்களாகவே அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தது. ஆனால் வெளியான பிறகு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது ஜவான்.

பாலிவுட்டில் வரவேற்பு:

அந்த வெற்றியை தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் எல்லோரும் அட்லீயின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் புது ப்ராஜெக்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார் அட்லீ.

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே மூவாயிரம் கோடி என்று கூறப்படுகிறது. அது இல்லாமல் படத்தில் அட்லிக்கு சம்பளம் மட்டுமே 500 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சல்மான்கான் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

அப்படி என்றால் ஹீரோ யார் என்று கேட்கும் பொழுது படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அட்லீ திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்தார் இந்த நிலையில் அவரை வைத்து பெரும் திரைப்படம் ஒன்றை பிளான் செய்து இருக்கிறார் அட்லி என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top