Tamil Cinema News
டப்பிங்கில் கூட காப்பியா.. அட்லீயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் எவ்வளவு பிரபலமான இயக்குனராக இருக்கிறாரோ அதே அளவிற்கு பாலிவுட்டிலும் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் அட்லி. ஏனெனில் பாலிவுட்டில் இவரது முதல் படமான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி ஓடி பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் பலரும் தன்னை வைத்து படம் இயக்கும்படி அட்லீயிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் அட்லீ இன்னமும் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்பது குறித்து யோசிக்கவில்லை அட்லீ.
மேலும் தமிழை விடவும் பாலிவுட்டில் அட்லீக்கு சம்பளமும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே தமிழில் மீண்டும் இவர் திரைப்படம் இயக்குவாரா? என்பதே கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 190 கோடி பட்ஜெட்டில் இவர் இந்தியில் இயக்கிய திரைப்படம் பேபி ஜான்.
தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆக இந்த திரைப்படத்தை இயக்கினார் அட்லி. ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே விஜய் நடித்த தெறி திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
அப்பொழுது அந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. அதனை பார்த்து தான் அட்லி இந்த திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் ஏற்கனவே அந்த படத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒருமுறை எதற்கு மக்கள் அதை பார்க்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படம் பெரிய வெற்றியை தரவில்லை. இந்த படத்தில் நிறைய காட்சிகள் தெறி திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் எப்படி அமைந்திருக்கிறதோ அதேபோல அமைந்திருக்கிறது. இப்படி தெறி திரைப்படத்தை முழுதாக காப்பி அடித்து படம் பண்ணுவதற்கு எதற்கு ஹிந்தியில் திரும்ப அதை எடுக்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் கேள்விகள் எழ துவங்கி உள்ளன.