News
த்ரிஷாதான் வேண்டும்!.. அடம் பிடித்த எம்.எல்.ஏ!.. அழைத்து வந்த கருணாஸ்.. வெளியான பகீர் தகவல்!..இப்ப மட்டும் அமைதியா இருக்கீங்க!..
Trisha Krishnan: நடிகைகள் குறித்து தமிழ் சினிமாவில் சர்ச்சைகள் வருவது என்பது இன்று நேற்று நடப்பதல்ல. தொடர்ந்து அது நடந்து வரும் ஒரு நிகழ்வுதான், அதுவும் பிரபலமான நடிகைகள் குறித்து எழும் சர்ச்சைகள் அதிகமாக பேசப்படும் விஷயமாக அமைகின்றன.
அந்த வகையில் தற்சமயம் த்ரிஷா குறித்து எழுந்துள்ள சர்ச்சையும் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறான விஷயத்தை பேசி இருந்தார் என்று கூறி அவர் மீது பெண்கள் அமைப்புகள் வழக்கு தொடுத்தனர்.
அதனால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் மன்சூர் அலிகான். அவர் பேசும் பொழுது முன்பெல்லாம் வில்லன்களுக்கு கதாநாயகிகளுடன் படுக்கை காட்சிகள் இருக்கும் இப்போதெல்லாம் அது இருப்பதில்லை என்று கூறியிருந்தது தான் அப்போது சர்ச்சையானது.

ஆனால் இந்த முறை அதைவிட மோசமான ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு பத்திரிக்கையில் பேசும் பொழுது அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம் கேட்டதற்கு இணங்க 25 லட்சம் ரூபாய்க்கு த்ரிஷாவை அழைத்து வந்து வெங்கடாசலத்திடம் விட்டிருந்தார் நடிகர் கருணாஸ் என்று ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.
பொதுவாக இப்படி நடிகைகள் குறித்த சர்ச்சைகள் எழுதும்பொழுது தமிழ் சினிமா பிரபலங்கள் இதற்கு குரல் கொடுப்பார்கள். உதாரணமாக மன்சூர் அலிகான் பிரச்சனை எழுந்த போது கூட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வரை இதற்காக குரல் கொடுத்திருந்தனர்.
ஆனால் தற்சமயம் இவ்வளவு அபத்தமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தும் அவர்கள் குறித்து எந்த ஒரு கருத்தையும் பிரபலங்கள் முன்வைக்கவில்லை என்பது மக்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருக்கிறது.
அதே சமயம் மன்சூர் அலிகான் விஷயத்திற்கு கொதித்த இந்த கூட்டம் எதற்கு அரசியல்வாதிக்கு மட்டும் அமைதியாக இருக்கிறது? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.
