வானில் தெரிந்த அவதார் படம் – புது தொழில்நுட்பத்தில் மாஸ் காட்டும் படக்குழு 

உலகிலேயே அதிக வசூல் சாதனை செய்து இன்றளவும் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு திரைப்படமாக அவதார் உள்ளது. 2009 இல் வந்த இந்த படத்தின் வசூல் சாதனையை இப்போது வரை வந்த எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை.

Social Media Bar

இந்நிலையில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான வே ஆஃப் வாட்டர் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை படக்குழு கையாண்டு வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் அதிக கற்பனை திறன் கொண்ட ஒரு இயக்குனர் ஆவார்.

இயக்குனர் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீது அதிக ஆர்வம் கொண்ட ஒருவராக ஜேம்ஸ் கேமரூன் இருக்கிறார். நேற்று அவதார் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சிக்கு முழுதாக நீல நிற லைட்டுகளை போட்டுள்ளனர்.

மேலும் அவதார் வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ட்ரைலரை விர்ச்சுவர் ப்ரொஜக்ட் செய்துள்ளனர். அதாவது வெற்றிடத்தில் எந்த திரையும் இல்லாமலேயே படம் ஒளிப்பரப்பட்டுள்ளது.

இவை மட்டுமில்லாமல் லைட் எரியக்கூடிய ட்ரோன்களை கொண்டு அவதார் வே ஆஃப் வாட்டர் என்கிற பெயரை வானில் தெரியுமாறு செய்துள்ளனர். முதல் பப்ளிசிட்டியையே இப்படி வேற லெவலில் செய்துள்ளனர் படக்குழுவினர்.

வீடியோவை காண க்ளிக் செய்யவும்