மனிதர்களுக்கு மீண்டும் மரண அடி? – மாஸ் காட்டும் அவதார் 2 புதிய ட்ரெய்லர்!

2009 இல் வெளியாகி உலகமெங்கும் ஹிட் அடித்த திரைப்படம் அவதார். 13 வருடங்கள் ஆகியும் கூட இன்றும் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் அவதார் திரைப்படமே முதல் இடத்தை பிடித்து வருகிறது.

அவதார் திரைப்படம் அப்போதே மிகுந்த பிரமாண்டத்துடன் வெளியானது. அதில் உள்ள காட்சி அமைப்புகளையும், நேமி கிரக வாசிகளையும் படத்தை பார்த்த யாராலும் மறக்க முடியாது.

இந்த படம் மொத்தமாக 5 பாகங்களுக்கு திட்டமிட்டிருப்பதாக அப்போதே படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். இதையடுத்து இரண்டாம் பாகம் எப்போது வரும்? என பலரும் காத்திருந்த நிலையில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அவதார் 2 வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கும்போது கதாநாயகனுக்கு குழந்தை இருப்பது தெரிகிறது. இனி வரும் பாகங்களில் அந்த கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வாய்ப்புள்ளது. தண்ணீரிலேயே செல்வதால் இந்த பாகத்தில் முதல் பாகத்தை விடவும் அதிக வித்தியாசமான காட்சிகளை பார்க்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் ட்ரைலை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh