செவ்வாய் கிரகத்தில் போய் மாட்டி கொள்ளும் மனிதன் –  மார்சியன் பட விமர்சனம்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? முடியாதா? என்பதுக்குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவில் கூட செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் குடிக்க தண்ணீர் இல்லாத, சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் கிரகத்தில் ஒரு மனிதன் மாட்டி கொண்டால் என்னவாகும் என்பதை கருவாக கொண்டு 2015 ஆம் ஆண்டு வந்த படம்தான் த மார்ஷியன்.

இந்த படத்தை ரிட்லி ஸ்காட் என்னும் இயக்குனர் இயக்கியிருந்தார். இதில் நாயகராக மார்க் வெட்னி நடித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி தளமானது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு குழுவை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அந்த குழுவும் நல்லப்படியாக செவ்வாய் கிரகம் சென்று அங்கு உள்ளவற்றை ஆராய்ச்சி செய்கிறது.

இந்நிலையில் திடீரென செவ்வாய் கிரகத்தில் புயல் வீச துவங்குகிறது. இதனால் ஆராய்ச்சி செய்யும் அணி தனது விண்கலத்திற்கு சென்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அதிகமாக அடித்த காற்றினால் ஒரு சிக்னல் டவர் பறந்து வந்து ஆராய்ச்சியாளர் குழுவில் உள்ள மேட் டாமன் என்கிற நபர் மீது மோத அவர் பறந்து போய் எங்கோ விழுகிறார்.

அவர் இறந்துவிட்டார் என்று நினைத்த விண்வெளி குழு அங்கிருந்து கிளம்புகிறது. ஆனால் அவர் இறக்கவில்லை சிறு அடியுடன் தப்பிக்கிறார். ஆனால் அவர் விழிப்பதற்குள் விண்வெளி களம் அவரை விட்டு வெகுதூரம் சென்றுவிடுகிறது.

எப்படியும் இவர் இருக்கும் தகவல் அறிந்து இன்னொரு விண்வெளி தளத்தை அனுப்ப வேண்டும் என்றாலும் கூட அதற்கு 2 வருட காலம் ஆகும். ஏனெனில் அத்தனை தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.

இந்நிலையில் இரண்டு வருடம் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு அவருக்கு இருக்கும் ஒரே வழி அங்கு ஆராய்ச்சி குழு விட்டு சென்ற பொருட்கள்தான். ஆமாம் ஆராய்ச்சி குழு அங்கே தங்கி இருப்பதற்கு ஒரு கொட்டகையை போட்டிருப்பர். அங்கு நவீன பொருட்கள் பல இருக்கும்.

முக்கியமாக அந்த கொட்டகை செவ்வாய் கிரகத்தில் இருக்கும் காற்றை இழுத்து அதில் உள்ள ஆக்ஸிஜனை பிரித்து கொடுக்கும். மேலும் அங்கு உள்ள உபகரணங்களை சோலார் ப்ளேட் கொண்டு சார்ஜ் செய்துக்கொள்ளலாம். தாவரவியல் விஞ்ஞானியான கதாநாயகன் 2 வருடங்களுக்கு தேவையான அளவில் உருளைகிழங்குகளை விவசாயம் செய்கிறார்.

அதன் பிறகு அவர் எப்படி உயிர் பிழைக்கிறார், முதலில் உயிர் பிழைப்பாரா?, பூமியை அடைவாரா?, செவ்வாய் கிரகத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்? இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழலாம்.

படத்தை பார்ப்பதன் மூலம் அதற்கு உங்களால் விடை காண முடியும். இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.

படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh