Cinema History
முதல் படத்திலேயே வாய்ப்பை கெடுக்க இருந்த இயக்குனர்!.. கமலுக்காக இயக்குனரையே மாற்றிய ஏ.வி.எம் செட்டியார்!..
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறந்த நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். புது வகையான கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக நடித்து மக்களிடம் பெயர் வாங்கியவர் கமல்ஹாசன்.
அதிலும் நடிப்பிற்கு சவால் விடும் பல கதாபாத்திரங்களில் அவர் அசாத்தியமாக நடித்துள்ளார். கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள்.
முதன் முதலில் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் இரு ஜோடிகளின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தியே படமாக்கப்பட இருந்தது, அப்போது அந்த படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரை நேரில் சந்தித்த கமல் தனக்கு நடிப்பின் மீது விருப்பம் இருப்பதை தெரிவித்தார்.
கமலின் அசாத்திய நடிப்பை கண்ட ஏ.வி.எம் அவருக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார். மேலும் எப்படியாவது இந்த பையனை வளர்த்துவிட வேண்டும் என நினைத்தார் ஏ.வி.எம். எனவே படத்தில் அந்த சிறுவன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதையை மாற்றி அமைத்தார் ஏ.வி.எம்
அப்போது களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கு இயக்குனர் ஜவர் சீதாராமன் தான் இயக்குனராக இருந்தார். அவர் கதையை மாற்றி அமைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அந்த கதை அந்த காதல் ஜோடிகளை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என அவர் நினைத்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்காக இயக்குனரையே படத்தில் இருந்து தூக்கினார் ஏ.வி.எம். அதற்கு பிறகு வந்த பீம்சிங் படத்தின் கதையை கமல்ஹாசனுக்கு ஏற்றாற் போல மாற்றியமைத்து படமாக்கினார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்