Cinema History
ஏ.வி.எம்மை பார்த்து ஞானவேல்ராஜா கத்துக்கணும்!.. இயக்குனர் விசுவிற்கு தயாரிப்பாளர் கொடுத்த மரியாதை!..
தமிழில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் பெரும் புகழை பெற்ற நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் நிறுவனம்தான். சினிமாவை கண்டுபிடித்ததே ஏ.வி.எம் நிறுவனம்தான். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் வெளியாகும் முக்கால்வாசி திரைப்படங்களில் ஆரம்பத்தில் ஏ.வி.எம் என்று வரும் பொழுது அவர்கள் தான் சினிமாவை தயாரித்திருப்பார்களோ என்கிற எண்ணம் இயல்பாகவே மக்களிடம் தோன்றியிருக்கிறது.
இப்படிப்பட்ட ஏ.வி.எம் நிறுவனம் ஒரு இயக்குனரை மிகவும் தவறாக எடை போட்டு பிறகு அவருக்கு பெரும் மதிப்பை அளித்துள்ளது அது வேறு யாருமில்லை இயக்குனர் விசு அவர்கள்தான். இயக்குனர் விசு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தின் கதையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் கூறி அதை படமாக்குவது குறித்து கேட்ட பொழுது இது மிகவும் சுமாரான ஒரு கதை இந்த திரைப்படத்திற்கு உங்களுக்கு பெரிய சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது ஆனால் அதற்கு பதிலாக ஒரு கார் வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம்.
விசுவிற்கும் நீண்ட நாட்களாக கார் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். சம்சாரம் அது மின்சாரம் படமாகி வெளியான போது இவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் வெற்றியை கொடுத்தது.
இதனை அடுத்து விசுவிற்கு சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுத்தார் ஏ.வி.எம் சரவணன். அந்த சமயத்தில் அந்த திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதற்கு செல்லும்பொழுது தன்னுடைய குடும்பத்தாரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டு இருந்தார் விசு.
விசுவிற்கு இந்த நேரத்தில் தக்க மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஏ.வி.எம் சரவணன் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் விமானத்தில் விசு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பிஸ்னஸ் க்ளாசில் டிக்கெட் போட்டுவிட்டு சாதாரண குடிமகன்கள் அமரும் எக்கனாமி கிளாசில் தனக்கான டிக்கெட்டை போட்டுக் கொண்டார் ஏ.வி.எம் சரவணன்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விசு நீங்கள் ஏன் சாதாரண எக்கனாமிக் டிக்கெட்டில் அமைந்திருக்கிறீர்கள் வந்து அங்கு அமருங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஏ.வி.எம் சரவணன் இந்த புகழ் உங்களுக்கு கிடைக்க வேண்டியது அப்போதுதான் உங்கள் குடும்பம் உங்களை மிகவும் பெரிதாக நினைப்பார்கள்.
உங்களை நானும் எப்படி மகிழ்ச்சி படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் அதற்கு இதுதான் சரியான மரியாதையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் ஏ.வி.எம் சரவணன் ஆனால் தற்சமயம் அமீர் ஞானவேல்ராஜா பிரச்சனையில் படம் நன்றாக ஓடியும் கூட அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை கொடுக்கவில்லை எனவே அவர் இந்த நிகழ்வை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்