Connect with us

அயலான் , கேப்டன் மில்லர் 3 நாள் வசூல் நிலவரம்… போட்டியில் ஜெயிப்பது யார்?

captain miller ayalaan

News

அயலான் , கேப்டன் மில்லர் 3 நாள் வசூல் நிலவரம்… போட்டியில் ஜெயிப்பது யார்?

Social Media Bar

Dhanush and Sivakarthikeyan : நடிகர் தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் நேரடியாகவே போட்டி இருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே, ஏனெனில் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே நடிகர் தனுஷ்தான்.

ஆனால் ஒரு அளவுக்கு மேல் சிவகார்த்திகேயன் வளர்த்து வந்த பொழுது அவர் தனியாக சென்று படங்களில் நடிக்க தொடங்கினார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட தற்சமயம் தனுஷிற்க்கு இணையான சம்பளத்தை பெற்று வருவதால் அவருடன் நேரடியாகவே போட்டி போட்டு விடுவது என முடிவெடுத்து அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

வசூல் ரீதியாக எந்த படம் அதிக வசூலை தருகிறதோ அதை வைத்துதான் அவர்களது சம்பளம் அடுத்த படத்திற்கு அதிகரிக்கும் என்பதால் இது ஒரு முக்கியமான போட்டியாக இருக்கிறது. கேப்டன் மில்லர் வெளியான முதல் நாளே 8 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு இரண்டாம் நாள் 7.50 கோடி வசூல் செய்தது.

captain-miller
captain-miller

மூன்றாம் நாளும் 7.40 கோடி வசூல் செய்து கிட்டத்தட்ட 23 கோடியை மூன்று நாட்களில் வசூல் செய்திருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம். ஆனால் அயலான் திரைப்படத்தை பொருத்தவரை அது மிகவும் குறைவான வசூலைதான் பெற்றிருக்கிறது.

முதல் நாள் அயலான் திரைப்படம் 3.30 கோடிதான் வசூல் செய்தது. இரண்டாம் நாள் 4.40 கோடிக்கும் மூன்றாம் நாள் 5.70 கோடியும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக மூன்று நாட்களில் 13.40 கோடிக்குதான் ஓடி இருக்கிறது அயலான் திரைப்படம்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தை விட அயலான் திரைப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதே சமயம் குடும்பங்கள் பார்க்கும் திரைப்படமாக கேப்டன் மில்லரை விட அயலான் திரைப்படமே பரிந்துரைக்கப்படுகிறது. அதனால்தான் மூன்று நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அயலான் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.

எனவே இன்னும் ஒரு வாரம் கழித்துதான் இரண்டில் எந்த திரைப்படம் அதிக வசூலை படைத்திருக்கிறது என்பதை கூற முடியும் என்கிற நிலை உள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top