என்ன வசூல் சாதனை செஞ்சாலும் கலாய் ஆகுது!.. விமர்சனத்துக்கு உள்ளான அயலான் பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர்!..

Sivakarthikeyan ayalaan movie: மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அயாலான். அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. எப்படியாவது இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் ஆசையாக இருந்தது.

பல வித தடைகளையும் தாண்டி ஒரு வழியாக இந்த படம் ஜனவரி 12 அன்று வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு போட்டியாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியானது. முதல் காட்சிக்கு பிறகு கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

Social Media Bar

மேலும் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகதான் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட்டார். இந்த நிலையில் கேப்டன் மில்லர் தொடர்ந்து நல்ல வசூலை படைத்து வருகிறது. ஆனால் அயலான் முதல் நாளே 4 கோடிதான் வசூல் செய்தது.

இந்த நிலையில் தற்சமயம் படம் 50 கோடிக்கு ஓடி இருப்பதாக அயலான் குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறன் முதல் பலரும் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறுகின்றனர். தனுஷை விட அதிக வசூல் செய்ததாக காட்டுவதற்காக இம்மாதிரியான போஸ்டர்களை வெளியிடுகின்றனர் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.