வரவேற்பை பெறும் அயோத்தி! – படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம்!

இன்று 03.03.2023 பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எல்லாம் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி என்கிற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

Social Media Bar

இதற்கு முன்பு சசி நடித்த எம்.ஜி.ஆர் மகன் போன்ற சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அயோத்தி திரைப்படம் நல்ல வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் கதைப்படி வட இந்தியாவில் அயோத்தியில் இருந்து ஒரு குடும்பம் ராமேஸ்வரத்திற்கு பயணம் கிளம்புகிறது. அதுதான் கதாநாயகியின் குடும்பம். தீபாவளி சமயத்தில் ராமேஸ்வரத்திற்கு கிளம்பும் இந்த குடும்பம் அங்கே ராமரை வணங்குவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறது.

மதுரை வந்து இறங்கிய குடும்பம் ராமேஸ்வரத்திற்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் இருந்து சில பிரச்சனைகள் துவங்க அதை வைத்து படம் செல்கிறது.

இந்த குடும்பத்தோடு சசி எப்படி கனெக்ட் ஆகிறார். சசி யார் என்பதையெல்லாம் படத்தின் ஓட்டத்தில் பேசப்பட்டுள்ளது. சிம்பிளான கதை களத்தை நல்ல திரைக்கதை வழியாக சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குனர் மந்திர மூர்த்தி.