ரீ ரிலிஸ்க்கு தயாராகும் பாபா! – இந்த வாட்டியாவது ஓடுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. அடிக்கடி இமயமலைக்கு சென்று வரும் ரஜினி அதை வைத்தே எழுதிய ஆன்மீக கதைதான் இந்த பாபா. படத்தின் கதையை ரஜினியே எழுதினார். 

Social Media Bar

பாட்ஷா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே அப்போதே ஹிட் அடித்தன. ஏனெனில் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

ஆனாலும் கூட ஏனோ படம் எதிர்ப்பார்த்த அளவில் ஓடவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மறுப்படியும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் பாபா படம் வெளியானபோது வரவேற்பு இல்லை என்றாலும் பிறகு அந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. 

இப்போதும் கூட பாபா படத்தை விரும்பி பார்ப்பவர்கள் உள்ளனர். இந்த நிலையில் படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். கலர் கரெக்‌ஷன், டிடிஎஸ் வேலை போன்றவற்றை கொஞ்சம் மேம்படுத்தி இந்த படத்தை வெளியிட உள்ளனர்.

மேலும் படத்தின் அனைத்து பாடலையும் ஏ.ஆர் ரகுமான் ரீமேக் செய்ய உள்ளதால் மேம்பட்ட தரத்தில் அந்த பாடல்களை கேட்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.