Tamil Cinema News
ஜிம் ட்ரைனருடன் அந்த சம்பவம்.. ஷாக் கொடுத்த பப்லு முன்னால் காதலி..!
வெள்ளித்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் பெரும்பாலும் முன்பு வந்த திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளார். மேலும் நிறைய திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஒரு வருடத்தில் 6 முதல் 7 படங்களில் நடித்து வந்தவர் பப்லு. ஆனால் 2000களுக்கு பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது சினிமாவில் குறைய துவங்கியது. அதன் பிறகு வாரணம் ஆயிரம், பயணம் மாதிரியான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
பழைய காதலி:
இந்த நிலையில்தான் சீத்தல் என்கிற பெண்ணுக்கும் பப்லுவுக்கும் இடையே காதலானது. சீத்தல் பப்ளுவை விட மிகவும் வயது குறைவான பெண் ஆவார். ஆனால் சில காலங்களிலேயே இவர்களது காதல் முடிவுக்கு வந்தது.
இருவருக்கும் ஒத்து வரவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சீத்தலுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. ஜிம் ட்ரைனராக இருக்கும் சுமேஷ் சோமசேகரன் என்பவரைதான் ஷீத்தல் திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.