எவ்வளவு சிதைக்கணுமோ சிதைச்சுட்டாங்க.. தெறி படத்தோட ஹிந்தி ரீமேக் செய்த சம்பவம்.!
நடிகர் விஜய் நடித்தது தமிழில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் தெறி. இந்த திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்சமயம் இந்த படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு வருகிறது.
ஹிந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் கலீஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் இதற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
ரீமேக் படம்:

இந்த படம் கத்தி திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை அதன் மூலம் பார்க்க முடிகிறது. சண்டை காட்சிகள் எல்லாம் கத்தி திரைப்படத்தை விடவும் ஓவர் டோஸாக இருப்பதாக தெரிகிறது. அதேபோல கத்தி திரைப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் ஜாக்கிசராஃப் நடித்திருக்கிறார்.
அவரது கதாபாத்திரமும் மிகவும் கொடூரமாக காட்டப்பட்டுள்ளது தமிழில் நாம் பார்த்த தெறி படத்தின் பீலிங் இந்த திரைப்படத்தில் வராது போல் உள்ளது என்கின்றனர் தமிழ் ரசிகர்கள். ஆனால் பாலிவுட் சினிமா அதிக மசாலாக்களை எதிர்பார்க்கக் கூடிய சினிமாவாகும்.
சண்டை காட்சிகளாக இருக்கட்டும் பாடல் காட்சிகளாக இருக்கட்டும் எல்லாமே அங்கு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் அதற்கு தகுந்தார் போல அந்த படம் உருவாகி இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.