Connect with us

எப்படி வந்து சிக்கிருக்கேன் பாரு!. லொக்கேஷன் பார்க்க போன இடத்தில் வசமாக சிக்கிய பாக்கியராஜ்!..

Cinema History

எப்படி வந்து சிக்கிருக்கேன் பாரு!. லொக்கேஷன் பார்க்க போன இடத்தில் வசமாக சிக்கிய பாக்கியராஜ்!..

Social Media Bar

தமிழ் திரை உலகிற்கு பாரதிராஜா வந்த பிறகு கிராமம் ரீதியான திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு வரத் துவங்கியது. இதனால் பல இயக்குனர்கள் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து கிராமம் தொடர்பான திரைப்படங்களை இயக்க துவங்கினர்.

அப்பொழுது பாக்யராஜும் அவ்வாறான திரைப்படங்களை இயக்கினார். பெரும்பாலும் அப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட் குறைவாக இருப்பதால் கிராமம் சார்ந்த இடங்களில்தான் படப்பிடிப்பும் அதிகமாக நிகழும். ஆனால் பாரதிராஜா போன்று இல்லாமல் பாக்கியராஜ் புதுவிதமான கதைகளத்தை உருவாக்கினார்.

அவரது கதைக்களத்தில் நகைச்சுவை அதிகமாக இருந்தது. அதே சமயம் படம் மிகவும் ஆர்வமாக செல்லும் பட்சத்தில் திரைக்கதையை எழுதினார் பாக்யராஜ். ராசுகுட்டி என்கிற திரைப்படத்தை அவர் இயக்கி வந்த பொழுது அந்தப் படத்திற்கான இடத்தை பார்ப்பதற்காக கிராமத்தில் ஒரு வீட்டை கேட்டிருந்தார்.

அந்த வீடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒருமுறை தனது பட குழுவுடன் அந்த வீட்டிற்கு சென்றார். அப்பொழுது வீட்டிற்கு முன்பு வரிசையாக கம்பம் நட்டு அதில் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. என்னவென்று அறியாமல் உள்ளே சென்றார்.

ஆனால் போன பிறகு தான் அது எலவு வீடு என்பது அவருக்கு தெரிந்தது. அங்கே இருந்தவர்கள் பாக்கியராஜ்க்கு வணக்கம் சொல்லிவிட்டு அழத் துவங்கினர். ஐயா உங்களை எல்லாம் இவனுக்கு தெரியும் என்று இவன் எங்களிடம் சொன்னதே இல்லை ஐயா என்று கூறிவிட்டு அவர்கள் அழுதுள்ளனர். பாக்யராஜும் நின்று சற்று நேரம் அங்கு சமாளித்துவிட்டு பிறகு மனகஷ்டமாக இருக்கிறது என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார் இதனை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

To Top