Cinema History
துரோகம் பண்ணி என் படம் வெளியாகணும்னு தேவை இல்ல!.. இயக்குனர் பெயரே இல்லாமல் வெளியான பாக்கியராஜ் படம்!.
Director baghyaraj: தமிழ் சினிமாவில் திரைப்படங்களை நடித்து இயக்குவது என்பதை மிகவும் பிரபலமாக்கியவர் இயக்குனர் பாக்கியராஜ் பாக்கியராஜிற்கு முன்பு சிலர் அதை செய்திருந்தாலும் கூட தொடர்ந்து அப்படி படங்களை இயக்கி அதில் அவரே நடித்து வந்ததால் அதன் பிறகு பல இயக்குனர்கள் அந்த முறையை பின்பற்ற தொடங்கினர்.
ஆனால் பாக்கியராஜ் இயக்கிய ஒரு திரைப்படத்தில் அவரது பெயரே வரவில்லை என்பது ஒரு விசித்திரமான தகவலாகும். ஆமாம் தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் திருமால் என்பவர் ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். அப்பொழுது அவரது நண்பரான ஜி ராமகிருஷ்ணன் என்பவரை அழைத்து என்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை நீ இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜி ராமகிருஷ்ணனும் அதற்காக ஒரு கதையை எழுதினார். அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பாக்கியராஜை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பாக்யராஜை பொறுத்தவரை அப்பொழுது அவர் மற்ற இயக்குனர்கள் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வந்தார்.
பொய் சாட்சி என்னும் அந்த திரைப்படத்தின் கதை பாக்கியராஜிற்கு பிடித்திருந்தது அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சில இடங்களில் இயக்கும் வேலையையும் பாக்யராஜ் செய்தார்.
இந்த நிலையில் இயக்குனர் என போட்டு பாக்யராஜின் பெயரை போட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்தார் தயாரிப்பாளர் இதனால் வருத்தப்பட்ட ஜி ராமகிருஷ்ணன் படத்தை விட்டு விலகினார். இது பாக்யராஜிற்கும் மிகுந்த வருத்தம் அளிக்கும் செய்தியாக இருந்தது.
ஏனெனில் முழு படத்தையும் பாக்யராஜே இயக்கவில்லை. ஜி ராமகிருஷ்ணன்தான் முக்கால்வாசி படத்தை இயக்கியிருந்தார். எனவே இந்த படம் வெளியாகும் பொழுது இதில் இயக்குனர் என யார் பெயரும் வரக்கூடாது என்று கூறிவிட்டார் பாக்கியராஜ். பொய் சாட்சி திரைப்படத்திலும் கடைசிவரை இயக்குனர் என்று யார் பேருமே வராமலே படம் வெளியானது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்