News
ஈஸியா அடிக்கலாம்னு அடிக்கிறாங்க!.. நடிகைகள் எல்லாம் என்ன கண்ணகியா!. திரிஷா விஷயத்தில் கடுப்பான பயில்வான் ரங்கநாதன்!.
Actor trisha : கடந்த சில நாட்களாக திரிஷா மன்சூர் அலிக்கான் பிரச்சனைதான் பெரும் பிரச்சனையாக போய் கொண்டுள்ளது. மன்சூர் அலிக்கான் விளையாட்டாக பேசும் பல விஷயங்கள் ஏற்கனவே சர்ச்சையாகி இருந்தன. இந்த நிலையில் கடந்த பேட்டி ஒன்றில் பேசும்போது வில்லன்களுக்கு முன்பெல்லாம் கதாநாயகிகளுடன் கற்பழிப்பு காட்சி இருக்கும்.
அந்த மாதிரியெல்லாம் இப்போது இருப்பதில்லை. லியோ படத்தில் கூட த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என கூறியிருந்தார். இதனால் கடுப்பான த்ரிஷா மன்சூர் அலிக்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இதை எதிர்த்து பேசியிருந்தார். இதற்கு நடுவே நடிகர் சிரஞ்சீவியும் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேச அவரை ஓரமாக வைத்து செய்துக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ஏனெனில் அவரே நிறைய பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளார் என்பது நெட்டிசன்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதற்கிடையே இதுக்குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், உண்மையில் தெரியாமல் சில இடங்களில் விளையாட்டாக பேசக்கூடியவர்தான் மன்சூர் அலிக்கான். ஒருவேளை அவர் பேசியது தவறு என்றே வைத்துக்கொண்டாலும் இதற்கு முன்பு எத்தனையோ நடிகர்கள் இப்படி பேசியுள்ளனர். அப்போதெல்லாம் வராத கோபம் மன்சூர் அலிக்கான் மீது மட்டும் ஏன் வருகிறது.
ஏனெனில் அவர் பெரிய ஹீரோ கிடையாது. ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் பேசியிருந்தால் இதே மாதிரி இந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். மேலும் இந்த நடிகைகள் எல்லாம் என்ன கண்ணகியா.. இவர்கள் கற்பழிப்பு காட்சியில் நடிக்கவில்லையா? என இதுக்குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
