Tamil Cinema News
தலைல தட்டி சொன்னாரு.. அது உங்களுக்கு அவமானம்னு சொன்னாரு.. சூர்யாவும் பாலாவும் நேரில் சந்தித்துக்கொண்ட தருணம்.!
சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு இருந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.
அதற்கு பிறகு சூர்யாவிற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. பிதாமகன் திரைப்படத்திற்கு முன்பு சூர்யாவிடம் இருந்த நடிப்பிற்கும் அதற்குப் பிறகு சூர்யாவிடம் இருந்து நடிப்பிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது.
அதற்கு காரணம் இயக்குனர் பாலாதான். இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யாதான் ஆரம்பத்தில் நடித்தார்.
ஆனால் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலாவும் சூர்யாவும் பிரிந்து விட்டனர். பிறகு அந்த திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார்.
சூர்யா பாலா உறவு:
இதனால் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே பெரிய இடைவேளை ஏற்பட்டு விட்டதாக பேச்சுக்கள் இருந்தன. சமீபத்தில் பாலா சினிமாவிற்கு வந்து 25 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் விழா ஒன்று நடத்தப்பட்டது. அப்பொழுது மேடையில் சூர்யாவும் ஒன்றாக ஏறி பேசி வந்தனர்.
அதில் பேசிய பாலா கூறும் பொழுது சூர்யாவும் நானும் அண்ணன் தம்பி போலதான் பழகி வருகிறோம். ஒரு நடிகர், இயக்குனர் என்கிற உறவை எங்களுக்குள் இருந்தது கிடையாது என்று கூறினார்.
அப்பொழுது சூர்யா சொல்லும்போது ஆரம்பத்தில் நான் பாலாவை சார் என்றுதான் அழைத்து வந்தேன் ஆனால் அவர் என்னை தலையில் தட்டி என்ன சார் என்று கூப்பிடுற. இனிமே அண்ணன் என்றுதான் கூப்பிடனும் என்று கூறினார்.
அப்பொழுது இருந்தே நாங்கள் அண்ணன் தம்பியாக தான் பழகி வருகிறோம் என்று கூறினார் அதற்கு பதில் அளித்த பாலா சூர்யாவும் என்னிடம் தம்பி போல தான் பழகி வந்திருக்கிறார். ஒருமுறை ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சூர்யாவிடம் நான் கேட்டேன். அதில் நடித்துவிட்டு சம்பளம் வாங்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
ஏன் என்று கேட்ட பொழுது நான் சம்பளம் வாங்கினால் அது உங்களுக்கு அசிங்கம் அண்ணா என்று கூறிவிட்டு சென்றார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் பாலா.