இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! – ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!
தமிழின் பெரும் நட்சத்திரங்களான கமல் ரஜினி இருவரது சினிமா வாழ்க்கையிலும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் கமல் மற்றும் ரஜினியை வைத்து பாலச்சந்தர் அதிக ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் பாலச்சந்தரும் கூட சில சில யோசனைகளை வழங்கி வந்தார்.
அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாகமானது பெரும் வேகமெடுத்து செல்லக்கூடியதாகும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டூயட் பாடலோ அல்லது நகைச்சுவை காட்சிகளோ வைக்க முடியாது. அந்த அளவிற்கு கதை விறுவிறுப்பாக செல்லும்.
இந்த நிலையில் பாலச்சந்தர் இரண்டாம் பாகத்தில் ஒரு டூயட் பாடல் வைக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார். ஆனால் அது படத்திற்கு அவ்வளவாக ஒத்து வராது என ரஜினியும், சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியுள்ளனர். இருந்தாலும் பாலச்சந்தர் விடாபிடியாக இருந்ததால் ரக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்கிற பாடல் வைக்கப்பட்டது.
பாடலாக அது நல்ல ஹிட் கொடுத்தாலும் படத்தில் அந்த சூழ்நிலைக்கு தேவையில்லாத ஒரு பாடலாகவே அது இருந்தது.