Connect with us

அதிக பட்ஜெட்டில் பாலகிருஷ்ணாவின் மாஸ் படம்..! அகண்டா 2 தாண்டவம்.. டீசரே மிரட்டுது..

Tamil Trailer

அதிக பட்ஜெட்டில் பாலகிருஷ்ணாவின் மாஸ் படம்..! அகண்டா 2 தாண்டவம்.. டீசரே மிரட்டுது..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக இருப்பது போலவே தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா.

நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு வெகு காலங்களாகவே பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதனால் பெரிய பட்ஜெட் படங்களை கூட பாலகிருஷ்ணாவை நம்பி எடுத்து வருகின்றனர். அதே சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கேலிக்கு உள்ளாகும் ஒருவராக பாலகிருஷ்ணா இருந்து வருகிறார்.

ஆனாலும் கூட சமீப காலங்களில் அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் தோல்வி காணவில்லை தொடர்ந்து வெற்றியை தான் கண்டு வருகிறது.  அவர் இரட்டை வேடத்தில் நடித்து அதிக வெற்றியை கொடுத்த  திரைப்படமாக அகண்டா திரைப்படம் இருந்தது.

இந்த திரைப்படத்தில் சிவபக்தனாக வரும் அகண்டா கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் சென்று கொண்டிருக்கின்றன. சீக்கிரத்திலேயே இரண்டாம் பாகம் வர இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியானது பாயப்பட்டி ஸ்ரீனு இந்த திரைப்படத்தை இயக்குகிறார். முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக பேண்டஸியாக இருக்கும் இந்த திரைப்படம் தசராவை முன்னிட்டு செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

To Top