தனுஷ் வீட்டில் சரக்கு போட்ட பிரபலம்… தகாத வார்த்தையில் திட்டிய செல்வராகவன்.. நடந்தது இதுதான்..!

தமிழ் சினிமாவில் தனுஷை அறிமுகப்படுத்திய பெருமை எப்போதுமே அவர்தான் அண்ணன் இயக்குனர் செல்வராகவனுக்குதான் செல்லும் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பொதுமக்களிடம் வரவேற்பு பெரும் படங்களாக இருக்காது.

அவற்றின் கதை அமைப்புகளும் திரைக்கதையும் வேறு மாதிரி இருக்கும் ஆனால் செல்வராகனுக்கு என்று ஒரு ரசிக பட்டாளம் உண்டு. அவர்களுக்கு அந்த திரைப்படங்கள் பிடிக்கும்.

செல்வராகவன் ரக படங்கள்:

ஆனால் குடும்பத்துடன் சென்று ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தை கொடுக்கும் படமாக செல்வராகவனின் திரைப்படங்கள் கண்டிப்பாக இருக்காது.

Social Media Bar

இருந்தாலும் செல்வராகவன் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பின் காரணமாக தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் அவரது திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பவா லெட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது புதுப்பேட்டை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கதைப்படி தனுஷின் அப்பாவிற்கு நண்பராக நான் நடித்து இருந்தேன். அப்பொழுது தனுஷ் வீட்டிற்கு அடிக்கடி வரும் பவா லெட்சுமணன் அவர் அப்பாவுடன் சேர்ந்து மது அருந்துவாராம்.

புதுப்பேட்டையில் நடந்த சம்பவம்:

பிறகு தனுஷின் அம்மாவை அவர் சைட் அடிப்பதும் அவரை ஆம்லெட் போட சொல்வதும் மாதிரியான காட்சிகளில் நடித்தாராம் பவா லட்சுமணன். சொல்ல போனால் அந்த பவா லெட்சுமணன் கதாபாத்திரத்தால்தான் தனுஷ் ரவுடியாக மாறுவதாக முதலில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

20 நாட்கள் அந்த படத்தில் நடித்துள்ளார் பவா லெட்சுமணன். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த காட்சிகளை பார்த்த செல்வராகவனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதை மானிட்டரில் பார்க்கும் பொழுது தகாத வார்த்தைகளால் பவா லட்சுமணனை திட்டினாராம்.

அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்று கூறுகிறார் பவா லெட்சுமணன்.