News
பீஸ்ட் காப்பியா..இல்லையா..? பாத்து தெரிஞ்சிக்கோங்க! – நெல்சன் நெத்தியடி பதில்!
பீஸ்ட் திரைப்படம் வேறு ஒரு படத்தின் காப்பி என பரப்பப்படும் தகவல்களுக்கு இயக்குனர் நெல்சன் பதிலளித்துள்ளார்.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் முன்பதிவுகள் முழுவதும் முடிந்துள்ளது. ரசிகர்கள் பீஸ்ட் ரிலீஸை முன்னிட்டு பேனர்கள், போஸ்டர்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதேசமயம் பீஸ்ட் திரைப்படம் ஏற்கனவே தமிழில் வெளியான குர்கா படத்தின் காப்பி என்றும், பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிம்பிளாக விளக்கமளித்துள்ள இயக்குனர் நெல்சன் “ஷாப்பிங் மாலை ஹைஜேக் செய்யும் கதை ஏற்கனவே நிறைய வந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சொல்லப்படும் விதம், காட்சிகளில் அவை மாறுபடும். இந்த மாதிரியான படங்களில் ஒரே மாதிரியான காட்சிகள் வருவதை தவிர்க்க முடியாது. கூர்கா படத்தை பார்த்தேன் அதற்கு, இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. படம் வெளியானதும் மக்களுக்கே காப்பியா இல்லையா என்று தெரியும்” என்று கூறியுள்ளார்.
