Connect with us

நானும் லோக்கலுதான்யா!.. இயக்குனர்களிடம் நிருபிக்க வாலி போட்ட பாடல்!..

poet vaali

News

நானும் லோக்கலுதான்யா!.. இயக்குனர்களிடம் நிருபிக்க வாலி போட்ட பாடல்!..

Social Media Bar

தமிழ் சினிமா துறையில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் பார்க்கப்பட்டவர் வாலி. கண்ணதாசனாவது கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அப்போது ரசிகர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பிடித்த வகையில் பாடல்களை எழுதி இருந்தார்.

ஆனால் வாலி கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி 90ஸ் கிட்ஸ் வரையில் பலருக்கும் பிடித்த வகையில் பாடல் வரிகளை எழுதியுள்ளார் சினிமாவில் தொழில்நுட்பமும் வளர்ச்சியும் மாறிக்கொண்டிருந்த பொழுது அதற்கு ஏற்றார் போல வாலியும் மாறி வந்தார். அதனால்தான் அவ்வளவு பழைய பாடல் ஆசிரியராக இருந்தும் கூட அவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இருந்து வந்தன.

வாலி பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் கிராம ரீதியான பாடல்கள் அவருக்கு எழுத வராது என்று பல இயக்குனர்கள் அப்போது நினைத்திருந்தனர். ஆனால் இளையராஜாவிற்கு தெரியும் வாலி எந்த வகையான பாடல் வரிகளையும் எழுதக்கூடியவர் என்று.

இருந்தாலும் இந்த இயக்குனர்களிடம் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தார் வாலி இந்த நிலையில் வருஷம் 16 என்கிற படத்தில் பாடல் வரிகள் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த படம் கிட்டத்தட்ட கிராம ரீதியான படம் என்பதால் அதற்கு தகுந்தார் போல பாடல் ஒன்றை எழுதினார் வாலி.

பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்கிற அந்த பாடல் அப்போது பெரிதாக ஹிட் அடித்தது. மேலும் வாலி கிராம ரீதியான பாடல் வரிகளையும் எழுதுவார் என்பதை நிரூபித்தது அந்த பாடல் வரிகள். அதை நிரூபிக்க தான் பாடல்வரிகளையே எழுதினேன் என்று வாலியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top