தினம் தினம் கண்ணீர் விட்டு அழுதோம்!.. அதுனாலதான் அமெரிக்காவுக்கு போனேன்!.. மனம் திறந்த நெப்போலியன்!..

Actor Nepolean : தமிழில் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். தொடர்ந்து பட வாய்ப்பை பெற்று வந்த நெப்போலியன் பல படங்களில் வில்லனாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் அரசியலிலும் தொடர்ந்து முன்னேறி வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிகர் நெப்போலியனின் வாழ்க்கை பெரிதும் மாறியது. திருமணத்திற்கு பிறகு நெப்போலியனுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரிய வகை நோயின் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் காரணமாக அந்த குழந்தை சில நாட்களில் நடக்கும் தன்மையை இழந்துவிடும். அதற்கு பிறகு இறந்துவிடும் என கூறியுள்ளனர். இது நெப்போலியன் குடும்பத்தையே வெகுவாக பாதித்துள்ளது. இதனால் தினம் தினம் அழுதுக்கொண்டே இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் அமெரிக்காவில் இதற்கான சிகிச்சை அளிக்கபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Social Media Bar

எனவே மகனை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர். அங்கு சென்ற அவரது மகனுக்கு இந்தியாவை விடவும் அமெரிக்காவை மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் இங்கு இருப்பதை போல அங்கு மக்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரை ஒரு மாதிரி பார்ப்பதில்லை.

இதனால் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆனார் நெப்போலியன். இருந்தாலும் கட்சி வேலைகளுக்காக இந்தியா வந்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் தந்தை இல்லாதப்போது தனிமையை உணர்வதாக நெப்போலியனின் மகன் கூறியதால் அரசியலை விட்டு விலகினார் நெப்போலியன்.

இப்போது அமெரிக்காவிலேயே ஒரு ஐடி நிறுவனத்தை நடத்திக்கொண்டு தனது மகனையும் பார்த்துக்கொள்கிறார் நெப்போலியன்.