Connect with us

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

News

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

Social Media Bar

தமிழ் சினிமா உலகிலும் கூட வெப் சீரிஸ்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளன. மக்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக மிகவும் வரவேற்பை பெற்று வரும் ஒரு தொடராக அயலி உள்ளது.

அயலி என்கிற வட்டார தெய்வத்தை வணங்கும் ஒரு கிராமம். அங்கு தனது தெய்வம் கோபப்பட கூடாது என்பதற்காக ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெண்கள் வயதுக்கு வந்த பிறகு அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் கிராமத்தில் ஒரு பெண் மட்டும் நன்றாக படித்து மருத்துவராக ஆசைப்படுகிறாள். வயதுக்கு வந்த பிறகு இந்த பெண் எப்படி அதை மறைத்து தனது குறிக்கோளை நோக்கி நகர்கிறார். அதே சமயம் கிராமத்தின் மாற்றத்திற்கு அவர் எடுக்கும் முயற்சிகள், அயலி தெய்வத்தை கிராமத்தில் நடக்கும் அரசியல் அனைத்தையும் இந்த கதை பேசுகிறது.

இதன் இயக்குனர் முத்துக்குமாருக்கு இதுதான் முதல் தொடராகும். அவருக்கு தெரிந்த இடத்தில் ஒரு பெண்ணை உண்மையிலேயே குறைந்த வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதை தடுக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டும் அவரால் அந்த திருமணத்தை நிறுத்த முடியவில்லை.

அதன் தாக்கமாக அவர் உருவாக்கிய தொடரே இந்த அயலி தொடராகும்.

To Top