Connect with us

நடிகையுடன் இருந்த உறவு.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு இதுதான் காரணமா!.. புட்டு புட்டு வைக்கும் பயில்வான் ரங்கநாதன்…

gv prakash actress

News

நடிகையுடன் இருந்த உறவு.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு இதுதான் காரணமா!.. புட்டு புட்டு வைக்கும் பயில்வான் ரங்கநாதன்…

Social Media Bar

தன்னுடைய 17 வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். வெயில் என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகம்  ஆனார். அந்த திரைப்படத்திலேயே சில பாடல்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ஜி.வி பிரகாஷ். தொடர்ந்து நடிகராக வேண்டும் என்ற ஆசைப்பட்ட ஜி.வி பிரகாஷ் டார்லிங் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

த்ரிஷா இல்லனா நயன் தாரா:

அந்த திரைப்படத்தை அடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் அவர் நடித்து அது ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்தது. இதற்கு நடுவே சிறுவயது முதலே அவருடன் நட்பாக இருந்து வந்த சைந்தவி என்பவரை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ்க்கும் சைந்தவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஏன் பிரிந்தனர் என்பது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன.

gv-prakash
gv-prakash

ஜிவி பிரகாஷை சைந்தவி தனிக்குடுத்தனம் வர சொல்லி அழைத்தார். அவரது தங்கை பவானியையும் தாயாரையும் தனியாக விட்டுவிட்டு வர ஜிவி பிரகாஷ் மறுத்துவிட்டார். அதனால்தான் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது என்று ஒவ்வொரு தரப்பில் பேச்சுக்கள் இருக்கிறது.

திரைப்படத்தால் வந்த பிரச்சனை:

இன்னொரு தரப்பில் கூறும் பொழுது திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் மோனிஷா யாதவ் என்கிற நடிகையுடன் நெருங்கி நடித்திருந்தார் ஜி வி பிரகாஷ். அந்த நடிகையுடன் முத்தக் காட்சிகள் நடிக்கும் போது 36 டேக் வாங்கி திரும்பத் திரும்ப அந்த காட்சியில் நடித்திருந்தார்.

GV-prakash
GV-prakash

அந்த சம்பவம்தான் பிறகு இந்த விவாகரத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன மேலும் மனுஷா யாதவிற்கும் இவருக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும் அரசல் புரசலாக பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top