Cinema History
விஜயகாந்த் படத்திற்கு பயமுறுத்தி வாய்ப்பு வாங்கினோம்!.. இதெல்லாம் ஒரு ட்ரிக்காய்யா…
தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் பார்ப்பது என்பது அனைத்து தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடமும் இருந்து வரும் விஷயமாக இருக்கிறது.
அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை கூறும் வகையில் ஒரு சம்பவம் விஜயகாந்த் திரைப்படத்தில் நடந்துள்ளது. தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த்.
தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் அவரது திரைப்பட வாழ்க்கையில் பெரும் மைல்கல்லாக இருந்தது என்று கூறலாம்.
ஆர்.கே செல்வமணிக்கு வந்த வாய்ப்பு:
அவையெல்லாம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்து விஜயகாந்தின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படங்கள் என கூறலாம். அப்படியான திரைப்படங்களில் புலன்விசாரணை முக்கியமான திரைப்படம் ஆகும்.
புலன் விசாரணை திரைப்படம் இயக்குனர் ஆர் கே செல்வமணியின் முதல் திரைப்படம் ஆகும். வழக்கம் போல விஜயகாந்தின் திரைப்படங்களை தயாரிக்கும் ராவுத்தர் பிலிம்ஸ்தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்தது. புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை ஆர்.கே செல்வமணி கூறிய பொழுது அது தயாரிப்பாளருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பீதியை கிளப்பிய தயாரிப்பாளர்:
அப்போது தயாரிப்பாளர் சிவா ஆர் கே செல்வமணியின் நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். இந்த சமயத்தில் விஜயகாந்தின் நண்பரான தயாரிப்பாளர் ராவுத்தர் உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். அப்பொழுது அவரை சந்தித்த தயாரிப்பாளர் சிவா ”நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஆர்.கே செல்வமணி மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
அதனால்தான் உங்களுக்கு இப்படி ஒரு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போலிருக்கு” என்று கூறி இருக்கிறார் அதனை கேட்ட ராவுத்தர் அதுதான் காரணமாக இருக்கும் என்று பயந்து புலன் விசாரணை திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததாக தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் பார்த்த செண்டிமெண்ட் காரணமாக தான் ஆர்.கே செல்வமணிக்கு முதல் திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது என அவர் கூறுகிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்