Connect with us

ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

Cinema History

ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

Social Media Bar

இப்போது பெரும் கமர்ஷியல் நாயகனாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் விஜய் ஒரு காதல் நாயகனாக மிகவும் பிரபலமானவர். அந்த காலக்கட்டங்களில் பாலிவுட்டில் துவங்கி கோலிவுட் வரை காதல் கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

1990கள் காலக்கட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்தார் லவ் டுடே, நிலாவே வா, நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் வந்து ஹிட் அடித்துக்கொண்டிருந்தன. எனவே அதிகப்பட்சம் இயக்குனர்கள் அனைவரும் அவருக்கு காதல் கதைகளே எழுதி வந்தனர்.

அப்போது இயக்குனர் எழிலும் விஜய்க்காக ஒரு காதல் கதையை எழுதியிருந்தார். அதை அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியிடம் கூறினார். அதை கேட்டதுமே ஆர்.பி செளத்ரிக்கு பிடித்துவிட்டது. இந்த கதையை உடனே விஜய்யிடம் கூறுங்கள் என ஆர்.பி செளத்ரி கூறினார்.

பிறகு விஜய்யை நேரில் சந்தித்த எழில் படத்தின் கதையை கூறினார். கதையை முழுமையாக கேட்ட விஜய் “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன்” என கூறிவிட்டார். இந்த நிலையில் மறு நாள் காலையில் எழிலை அழைத்த ஆர்.பி செளத்ரி “விஜய்யிடம் கதையை கூறினீர்களா?” என கேட்டுள்ளார்.

கூறினேன் சார் யோசித்து சொல்றேன்னு சொல்லியிருக்கிறார்” என எழில் கூறியுள்ளார். உடனே எழிலை அழைத்துக்கொண்டு விஜய்யின் வீட்டிற்கே சென்றுவிட்டார் ஆர்.பி செளத்ரி. இது நல்ல கதையாச்சே எதற்கு விஜய் யோசிக்கிறார் என ஆர்.பி செளத்ரிக்கு வியப்பு. ஆனால் அங்கு சென்றதுமே அவர்களை பார்த்த விஜய் படத்துக்கு நான் தயார் சார். எப்ப ஷூட்டிங் போகலாம் என கேட்டுள்ளார்.

அந்த கதைதான் 1999 இல் துள்ளாத மனமும் துள்ளும் என்கிற பெயரில் வெளியானது.

To Top