Connect with us

சினிமாவே ஒரு வி**சார விடுதி.. இந்திய சினிமாவின் ஆணிவேரையே ஆட்டிவிட்ட நடிகை..!

tamil actress

News

சினிமாவே ஒரு வி**சார விடுதி.. இந்திய சினிமாவின் ஆணிவேரையே ஆட்டிவிட்ட நடிகை..!

Social Media Bar

சினிமா துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு பல அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளா சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகையே அதிர செய்துள்ளது இந்த ஹேமா கமிட்டி அறிக்கை.

வழக்கமாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் இது போன்ற பிரச்சனைகள் நடப்பதாக பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், கேரளா சினிமாவில் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் நடிகைகளுக்கு ஏற்படாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்போது கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெங்காலி நடிகை ஒருவர் பெங்காலி திரையுலகில் நடக்கும் பிரச்சனைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட தற்போது இது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை

சமீப நாட்களாக ஹேமா கமிட்டியின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பிரபலமாக உள்ள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்முறைக்கு ஆளானதும், அந்த சம்பவத்தில் பிரபல மலையாள சினிமாவின் நடிகர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதும் தகவல் வெளிவந்தது.

இதனால் நடிகைகளின் பாதுகாப்புக்காக கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஹேமா கமிட்டி என்ற ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் புகார்களை பதிவு செய்து வந்தது.

hema committe

இந்நிலையில் சமீப காலங்களாக ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்து கொண்டிருக்கும் அறிக்கை கேரளா சினிமா உலகை அதிர செய்திருக்கிறது. கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல வன்முறைகளுக்கு 10 பிரபல நடிகர்கள் தான் தலைமை தாங்குகிறார்கள் என்ற செய்தியும் வெளிவர, மறைந்த கேரளா சினிமா நடிகரின் மகள் ஒருவர் கேரளா சூப்பர் ஸ்டார் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றமும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவைப்பட்டால் அவரின் பெயரைக் கூட வெளியில் சொல்ல தயாராக இருக்கிறேன் என மறைந்த நடிகரின் மகள் கூறியுள்ளார். கேரளா சினிமாவில் இருக்கும் பலரும் ஹேமா கமிட்டியின் மூலம் வெளியாகும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

பெங்காலி நடிகையின் குமுறல்

இந்நிலையில் பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி. இவர் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு படங்களில் நடித்து பெங்காலி திரையுலகில் அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஹேமா கமிட்டி அறிக்கையினால் மலையாள சினிமா அதிர்ந்து போய் இருக்கிறது. அது போல் ஏன் பெங்காலி திரைப்படத் துறையில் கமிட்டி அமைக்கவில்லை.

பெங்காலி திரைப்படத் துறையில் நடிகர்கள் முதல் இயக்குனர், தயாரிப்பாளர்கள் என பலரும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலில் கொடுமைகளை செய்து பல தொந்தரவுகளைக் கொடுத்து வரும் நிலையில், நானும் இது போன்ற மோசமான அனுபவத்தை பெற்றிருக்கிறேன் எனக் கூறியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

rita padhari

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சக நடிகைகளும் இதைப்பற்றி கூற முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார். சினிமாவில் சாதிக்க வரும் நடிகைகளுக்கு, சினிமா துறையில் அதிகாரம் மிக்கவர்களால் ஏற்படும் பிரச்சினையைப் பற்றி கூறினால் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்தில் பலரும் இதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பது நியாயமான ஒன்றா? அவர்களின் முகத்திரையை நாம் கிழிக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் மேற்கு வங்கத்தின் முதல்வரான மம்தா பானர்ஜியை டேக் செய்து, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நடிகை போர்க்கொடி தூக்கிருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
To Top