Special Articles
தமிழ் சினிமாவில் எப்போதுமே மாஸாக இருக்கும் வில்லன் கதாபாத்திரங்கள்!.. ஒரு பார்வை..
தமிழ் சினிமாவில் அரசியல், காதல், நட்பு, துரோகம், உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம், வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல முக்கிய கதை அம்சங்களை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும்.
அந்த வகையில் படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஒரு சில நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து வெற்றி அடைந்தால் அது அவர்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கும். தற்போது நடிகர்களை எல்லாம் விட வில்லன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களை இந்த பட்டியலில் காண்போம்.
அமைதிப்படை 1994

சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் மற்றும் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமைதிப்படை. இந்தப் படத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்திருப்பார் அப்பாவாக நாகராஜசோழனாகவும், மகனாக தங்கவேலுவாகவும் நடித்திருப்பார். கோயிலில் தேங்காய் பொறுக்கி வாழும் அமாவாசை பல குறும்புத்தனமும், புத்திசாலித்தனமும் கொண்டவனாக இருக்கிறார்.
இவரை மணிமாறன் கதாபாத்திரத்தில் நடித்த மணிவண்ணன் உதவியாளராக சேர்த்துக் கொள்ள எம்எல்ஏ சீட்டு விவகாரத்தில் வீம்பாக அமாவாசையை நிற்க வைக்கிறார். எதிர்பாராவிதமாக அமாவாசை அந்த எம்எல்ஏ பதவியில் வெற்றி பெறுகிறார்.
இந்நிலையில் அமாவாசையாக இருந்த சத்யராஜ் தற்போது நாகராஜசோழனாக உருமாறுகிறார். எம்எல்ஏ பதவியில் வெற்றி பெறுவதற்கு முன்பாக தாயம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இருப்பார். எம்எல்ஏ பதவியில் வெற்றி பெற்ற பிறகு ஒரு மகாராஜாவின் பெண்ணை திருமணம் செய்து கொண்டு தாயமாவை ஏமாற்றி விடுவார்.
இதனால் மனம் உடைந்து போன தாயம்மா தன்னுடைய பிரசவத்தில் இறந்து போக, தன்னுடைய தாயை ஏமாற்றிய அவரின் வாழ்க்கை சீரழித்த எம்எல்ஏ நாகராஜ சோழனை தங்கவேலு பழி வாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறான்.
இந்நிலையில் அரசியலில் பல அட்டூழியங்கள் செய்து கொண்டு இருக்கும் நாகராஜசோழன், தங்கவேலுக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை கடத்திச் செல்கிறான். இதனால் போகமடைந்த தங்கவேலு அவரை கொலை செய்வார்.
இவ்வாறாக படத்தின் கதை அமைந்திருக்க இந்த படத்தில் சத்யராஜ் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
அஜித் வாலி 1999

இந்த திரைப்படத்தில் அஜித் இரு வேருடங்களில் நடிக்க சிம்ரன், ஜோதிகா, விவேக் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் கதாநாயகனாக ஒரு அஜித்தும், வில்லனாக ஒரு அஜித்தும் நடித்திருப்பார். சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோ அஜித்தும், தேவா என்ற கதாபாத்திரத்தில் காது கேட்காத, வாய் பேசாத கதாபாத்திரத்தில் அஜித் வில்லனாக நடித்திருப்பார்.
இந்நிலையில் பிசினஸில் நம்பர் ஒன்றாக இருக்கும் தேவா ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டால் அதை வாங்காமல் விடமாட்டார். அந்த வகையில் சிவா விரும்பிய பெண்ணை தேவாவிற்கு அறிமுகம் செய்ய தேவாவிற்கு சிவாவின் காதலியான சிம்ரன் (பிரியா) மீது ஈர்ப்பு வர, சிவா பிரியாவை திருமணம் செய்த பிறகு, தேவா தன்னை காதலிப்பதாக உணர்ந்த பிரியா அதை சிவாவிடம் தெரிவிக்கிறாள். ஆனால் தன் அண்ணன் அவ்வாறு இல்லை என பிரியாவுடன் அடிக்கடி சிவா சண்டை இடுகிறான்.
இதன் காரணமாக இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும் வேளையில், சிவா வேலை காரணமாக வெளியூர் செல்ல, பிரியாவிடம் தான் சிவா என நம்ப வைத்து தேவா தேனிலவிற்கு செல்கின்றான். அப்போது தான் தேவா பிரியாவை ஏமாற்றுவதாக உணர்ந்த சிவா அங்கு வந்து அவரின் அண்ணனை அடித்து பிரியாவை காப்பாற்றுகிறான்.
ஆளவந்தான் 2001

இந்த படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஒரு கதாபாத்திரத்தில் நந்து என்றும், மற்றொரு கதாபாத்திரத்தில் விஜய் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். ஆளவந்தான் நந்து என்ற கதாபாத்திரம் சற்று மிருகத்தனம் உடையவனாகவும், விஜய் என்ற கதாபாத்திரம் ராணுவத்தில் பணிபுரிபவராகவும் காட்டப்பட்டிருக்கும்.
நந்து கதாபாத்திரம் தன் சித்தியை சிறுவயதில் கொன்றதாக சிறை செல்கிறான். சிறுவயதில் நடந்த சில கசப்பான அனுபவங்களால் அவன் உளவியல் ரீதியான நோய்க்கு ஆளாக்கப்படுகிறான்.
இந்நிலையில் ராணுவத்தில் வேலை பார்க்கும் விஜய், பிரபல டிவியில் ரிப்போர்ட்டர் ஆக பணிபுரியும் தேஜஸ்வினையை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து மனநல காப்பகத்தில் இருக்கும் நந்துவை சந்திக்க செல்கிறார்கள்.
ஆனால் அங்கு நந்து, தேஜஸ்வினியை பார்த்து தன் சித்தி போல நினைத்துக் கொண்டு அவளை கெட்டவளாக பார்க்கிறான். எனவே தேஜஸ்வினிடமிருந்து விஜய்யை காப்பாற்றுவது இவன் கடமை என நினைத்து செய்யும் செயல்கள் தான் ஆளவந்தான்.
எந்திரன் 2010

இந்த திரைப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருக்கிறார். விஞ்ஞானியாக கே வசீகரன் என்ற கதாபாத்திரத்திலும், அவர் உருவாக்கிய ரோபோவாக சிட்டி என்ற கதாபாத்திரத்திலும் அவர் இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் உருவாக்கிய ரோபோ ராணுவத்திற்காக கொடுக்க வேண்டும் என ஆசைப்படும் வசீகரன், சில காரணங்களால் அதை இராணுவத்தில் சேர்க்க இயலாது என கூறுகிறார்கள். இந்நிலையில் வீட்டிற்கு சிட்டியை அழைத்து வரும் வசீகரன் தான் காதலிக்கும் சனாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்.
சனாவிற்கு பல உதவிகளை செய்யும் சிட்டி, இடையில் சிட்டி ரோபோவிற்கு உணர்வுகள் வர அது வசீகரனின் காதலி ஆன சனாவின் மீது காதல் கொல்கிறது. இதனால் கோபமடைந்த வசீகரன் சிட்டியை உடைத்து குப்பையில் இருந்து விடுகிறான்.
சிட்டியை மீட்டெடுக்க போஹார் என்ற விஞ்ஞானி போகிறார். மேலும் சேதமடைந்த நிலையில் இருந்த சிட்டி தன்னை மீட்டுக்கொண்டு வில்லனாக மாறுகிறது. வசீகரனுக்கும், சனாவிற்கும் திருமணம் நடக்கும் போது சனாவை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சிட்டி அதன் இடத்திற்கு வருகிறது.
அதன் பிறகு எவ்வாறு வில்லன் சிட்டியிடம் இருந்து வசீகரன் சனாவை காப்பாற்றினார் என்பதை பற்றி உருவாகி இருக்கும் திரைப்படம் எந்திரன்.
தனி ஒருவன் 2015

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மித்ரன் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஜெயம்ரவி நடித்திருப்பார்.
வில்லன் கதாபாத்திரத்தில் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி ஒரு செல்வாக்கு மிக்க ஒரு விஞ்ஞானியாகவும், சட்ட விரோதமாக மருத்துவ நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த மருந்து மாஃபியாவின் தலைவனான அபிமன்யுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரியான மித்ரன் எவ்வாறு முயற்சி எடுக்கிறார். இறுதியில் வில்லன் அபிமன்யுவை அவர் கண்டுபிடித்தார் என்பது தான் படத்தின் கதையாக அமைந்திருக்கும்.
மாமன்னன் 2023

அரசியலில் நடக்கும் சாதிய அரசியலைப் பற்றி பேசும் படமாக திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, உதயநிதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் எம்எல்ஏவாக மாமன்னன் வடிவேலுவும், அவரது மகனாக அதிவீரன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.
எதிர்பாரவிதமான சம்பவத்தினால் அதிவீரனுக்கும் ரத்தினவேல் இருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, அவர்களை சமரசம் பேசுவதற்காக ரத்தினவேலு மாமன்னனையும் அதிவீரணையும் அழைக்கிறார். இந்நிலையில் இவர்களின் பிரச்சனை உட்கட்சி பிரச்சனையாக மாறுகிறது. இதனால் ரத்தினவேலு தன் கட்சியிலிருந்து விலகி எதிர்கட்சியில் சேர்ந்து மாமன்னனை விழ்த்த முடிவு செய்கிறார். இதில் மாமன்னனை அவர் வீழ்த்தினார்? ரத்தினவேலு அதிவீரன் மோதல் என்னானது? என்பது தான் படத்தின் மீதி கதை.
