Cinema History
இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..
தமிழ் திரை இயக்குனர்களில் எப்போதுமே முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவில் புது முயற்சிகளை எடுத்தவர்.
இப்போது உள்ள இயக்குனர்கள் போல சண்டை காட்சிகள் மட்டும் வைத்து படங்களை இயக்காமல் படங்களில் பல விஷயங்களை பேசி இருந்தார் பாரதிராஜா. அதனாலேயே பாரதிராஜா திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.
பாரதிராஜா தனது முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் இயக்குனர் பாக்யராஜ். ஒரு காலகட்டத்திற்கு பிறகு பாக்கியராஜ் தனியாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தார் ஆனால் முதலில் திரைக்கதை எழுதி பழகி இருந்தால்தான் பிறகு திரைப்படம் எடுக்க முடியும்.
எனவே ஒரு திரைகதையை பாக்கியராஜ் எழுதினார். எழுதிய பிறகு அந்தத் திரைக்கதையை பாரதிராஜாவிடம் கொண்டு வந்து கொடுத்து நான் எழுதிய கதை படித்து பாருங்கள் சார் என்று கூறியுள்ளார். பாரதிராஜாவும் அந்த கதையை படித்தார்.
பாரதிராஜாவிற்கு அந்த கதை நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது ஆனாலும் தொழிலில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் இந்த கதையைப் படித்து நன்றாக இருக்கு என்று கூறினால்தான் சரியாக இருக்கும் என்று யோசித்தார் பாரதிராஜா. எனவே பஞ்சு அருணாச்சலத்திடம் இந்த கதையை கொண்டு சென்றார் அதனை படித்த உடனேயே பஞ்சு அருணாச்சலம் ஒரு விஷயத்தை கூறினார்.
பாக்கியராஜ் எதிர்காலத்தில் சிறப்பாக வருவார். அவரது கதை சிறப்பாக இருக்கிறது. எனவே இந்த படத்திற்கான திரைக்கதையை பாக்கியராஜ் எழுதட்டும் வசனத்தை நான் எழுதுகிறேன் என்று கூறினார் பிறகு பாக்யராஜ் எழுதிய அந்த கதை பாரதிராஜா இயக்கத்தில் படம் ஆக்கப்பட்டது. நிறம் மாறாத பூக்கள் என்கிற அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கண்டது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்