Cinema History
துணை நடிகருக்காக பாக்கியராஜ் செய்த வேலை!. இதுவரை எந்த இயக்குனரும் செஞ்சதில்லை..
தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.
அதே போல பல புது முகங்களுக்கு பாக்கியராஜ் அதிகமாக வாய்ப்புகள் கொடுத்துள்ளார். இயக்குனர் பாண்டியராஜன், பார்த்திபன் அனைவருமே பாக்கியராஜின் அறிமுகத்தால் சினிமாவிற்கு வந்தவர்களே. நடிகர்களிலும் பல நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகர் சங்கிலி முருகன் பல காலங்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். எந்த படத்திலும் அவருக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அப்போது பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திற்கு கட் அவுட் வைக்கும்போது அதில் சங்கிலி முருகன் போட்டோவையும் வைத்தார் பாக்கியராஜ். பொதுவாக இயக்குனர்கள் கட் அவுட்டில் இந்த மாதிரி துணை நடிகர்கள் புகைப்படத்தை கட் அவுட்டில் வைத்தது இல்லை.
எனவே இதனால் மனம் நெகிழ்ந்த சங்கிலி முருகன் பாக்கியராஜுடம் வந்து கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார்.
