அந்த மாதிரி படம் எடுத்தா ஓடாது!.. போடா பாலச்சந்தருக்கே ஓடிருக்கு!.. பாக்கியராஜ் எடுத்த ரிஸ்க்!.

தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்குனராக அறிமுகமானப்போது அவருக்கு திரைத்துறையில் அதிகமான வரவேற்பு இருந்தது. அவரது முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திற்கே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது.

இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போலவே அப்போது பாக்கியராஜ் வரவேற்பை பெற்றிருந்தார். இதனால் அவரது குரு பாரதிராஜாவை போலவே புது புது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் பாக்கியராஜ். பாக்கியராஜ் மற்றும் சரிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள்.

Social Media Bar

இந்த திரைப்படத்தை இயக்கும்போது படத்தில் அடிக்கடி ப்ளாஸ் பேக் காட்சிகள் வருவது போல காட்சிகளை வைத்தார் பாக்கியராஜ். படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தை பார்த்த அவரது நண்பர்கள் படத்தை வெகுவாக விமர்சித்தனர்.

படம் முழுக்க நிறைய ப்ளாஸ் பேக் காட்சிகள் இருப்பது படத்தின் ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பார்ப்பவர்களுக்கு அது அயர்ச்சியை ஏற்படுத்தும் என நண்பர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த பாணியில் படம் எடுப்பது நல்ல வெற்றியை கொடுக்கும் என நினைத்தார். ஏனெனில் ஏற்கனவே இதே பாணியில் இயக்குனர் பாலச்சந்தர் அந்த நாள் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

அது பெரும் வெற்றியை கொடுத்தது. எனவே இந்த படமும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்தார் பாக்கியராஜ். அதே போலவே அந்த படம் பெறும் வெற்றியை கொடுத்தது.