உதவி இயக்குனர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. படப்பிடிப்பையே நிறுத்திய பாக்கியராஜ்!.. அட கொடுமையே..

bhagyaraj

தமிழ் திரை இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் புதிய தலைமுறைகள் உள்ளே வர வர பாக்கியராஜ்க்கான மார்க்கெட்டும் குறைத்து வர துவங்கியது.

ஆனால் மார்க்கெட் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பாக்கியராஜ் அதிகமான வாய்ப்புகளை பெற்று வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனர்களின் பேச்சுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் பாக்யராஜ் என்று அவரிடம் பணி புரிந்தவர்களை சொல்வதுண்டு.

இதுகுறித்து அவருடன் பணிபுரிந்த நந்தகுமார் என்கிற உதவி இயக்குனர் ஒரு விஷயத்தை கூறியிருந்தார். நந்தகுமார் பல படங்களில் பாக்யராஜுடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். ஒருமுறை இரவு 2 மணி அளவில் உதவி இயக்குனர்களை அழைத்த பாக்கியராஜ் ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

சரி என்று அனைவரும் சென்றுள்ளனர் அப்போது அவர்களிடம் ஒரு கதையை சொல்லியுள்ளார் பாக்யராஜ். அதை கேட்ட நந்தகுமார் படத்தின் முதல் பாதி சுமாராக உள்ளது இரண்டாவது பாதையில் நல்லாவே இல்லை சார் என்று கூறிவிட்டார்.

இதை கேட்டதும் பாக்கியராஜிற்கு அதிர்ச்சி. அதற்குப் பிறகு அமைதியாக சென்றுவிட்டார். பிறகு தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு போன் செய்து அவரிடம் என்ன சொன்னீர்கள்? அவர் படமே எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார் என கூறியுள்ளார்.

பிறகுதான் தெரிந்துள்ளது அந்த கதை திரைப்படமாக்கப்பட இருந்த கதை ஆனால் நந்தகுமார் நன்றாக இல்லை என்று கூறியதால் பாக்கியராஜ் அந்த படத்தை நிறுத்திவிட்டார். நிறுத்திய பிறகு மீண்டும் அந்த கதையை முழுவதுமாக சரி செய்து அந்த கதையை மீண்டும் நந்தகுமாரிடம் கூறியுள்ளார். இப்போது நந்தகுமார் அந்த கதை நன்றாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

பிறகு அது படமாக வெளியானது ராசுக்குட்டி என்ற பெயரில் வெளியான அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த அளவிற்கு தன்னுடைய கதை மற்றவர்களுக்கு பிடிக்கிறதா என்பதில் முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்திருக்கிறார் பாக்யராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *