Connect with us

வில்லனா நான் நடிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..! விஜயகாந்த் பட வாய்ப்பில் நெப்போலியனுக்கு அடித்த அதிஷ்டம்.!

Tamil Cinema News

வில்லனா நான் நடிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..! விஜயகாந்த் பட வாய்ப்பில் நெப்போலியனுக்கு அடித்த அதிஷ்டம்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே சிறப்பாக நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன்.

இப்பொழுதும் கூட அவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாதியிலேயே அமெரிக்கா சென்று அங்கு செட்டிலான காரணத்தினால் பெரும்பாலும் இப்பொழுது அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதே இல்லை.

ஏதாவது சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தால் மட்டும் வந்து நடித்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை துவங்கி அதில் வளர்ச்சியை கண்டு வருகிறார் நெப்போலியன்.

இந்த நிலையில் விஜயகாந்த் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் நெப்போலியன் கூறும் பொழுது புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தான் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானேன்.

அதற்கு பிறகு தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் எனக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பரதன் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளர் என்னை வில்லனாக நடிக்க வேண்டாம் என்று கூறினார்.

ஒரு சிஐடி அதிகாரியாக நடிக்க உங்களது உடல் வாகுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார். நான் முதல் படம் நடிக்கும் பொழுதே நடிகர் விஜயகாந்த் அவருடைய நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை நடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவு பெரிய நடிகருடன் எனக்கு நான்காவது திரைப்படத்திலேயே வாய்ப்பு கிடைத்தது அதிக மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இல்லாமல் கதாநாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரமும் கிடைத்தது என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

To Top