Cinema History
என்ன சார் சரக்கு பேர எனக்கு வைக்கிறீங்க!.. பெயர் வைத்த பாரதிராஜாவிடம் வம்பு செய்த நெப்போலியன்!.
Bharathiraja and Nepolean : தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமான நெப்போலியன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
பிறகு அரசியலுக்கு சென்ற நெப்போலியன் சில காலங்கள் கழித்து அமெரிக்காவிற்கு சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்சமயம் அமெரிக்காவில் விவசாயம் செய்து வரும் நெப்போலியன் அங்கு ஒரு ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களிலேயே ஐடி நிறுவனம் நடத்தும் ஒரே அரசியல்வாதி நடிகர் நெப்போலியன் மட்டும்தான் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்களை பாரதிராஜா அறிமுகப்படுத்தி இருக்கிறார் அப்படி ஒவ்வொரு வரை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிஜப் பெயரை தவிர்த்து சினிமாவிற்கு என்று அவர்களுக்கு ஒரு பெயரை பாரதிராஜா வைப்பார்.

அப்படியாக நெப்போலியன் நிஜ பெயர் குமரேசன் என்பதாகும் அந்தப் பெயர் தமிழ் சினிமாவிற்கு சரியாக இருக்காது எனவே உன் உயரத்திற்கும் கம்பீரத்திற்கும் ஏற்ற மாதிரி ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று நெப்போலியனிடம் கூறி இருக்கிறார் பாரதிராஜா.
அதனால் நெப்போலியன் ஒரு 25 பெயர்களை எழுதி கொண்டு வந்து பாரதிராஜாவிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த 25 பேருமே பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை கடைசியாக யோசித்த பாரதிராஜா நெப்போலியன் என்று பெயர் வைத்திருக்கிறார்.
அந்த பெயரை கேட்டதுமே இது ஒரு மது நிறுவனத்தில் பெயர் ஆச்சே இதை வைத்து நம்மை கிண்டல் செய்ய மாட்டார்களா என்று நினைத்திருக்கிறார் நெப்போலியன். ஆனால் பாரதிராஜாவிடம் அதை கேட்டுக் கொள்ளவில்லை ஏனெனில் முதல் படத்தில் அவர் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் அதை வீணாக்க வேண்டாம் அவரை கோபப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார் ஆனால் அந்த பெயரும் அவருக்கு ஒரு நல்ல அடையாளமாக தான் அமைந்தது.
