Cinema History
இடத்தை விட்டு வெளியே போடா!.. பாரதிராஜாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஏ.வி.எம்…
இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. கிராமத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். சினிமாவிற்கு வரும்போதே கிராமத்து பாணியிலான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் பாரதிராஜாவின் பெரும் ஆசையாக இருந்தது.
இந்த நிலையில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் கிராம பாணியிலான ஒரு திரைப்படமாகவே இருந்தது. இந்த படம் சிறப்பான வெற்றியை கண்டது. இதனை தொடர்ந்து பாரதி ராஜா இயக்கிய படங்கள் பலவும் அப்படியான படங்களாகவே இருந்தன.
ஆனால் ஆரம்பக்காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் பாரதிராஜா. பல வருடங்களாகவே இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். இந்த நிலையில் ஏ.வி.எம் நிறுவனத்தில் சினிமாவில் உள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தை போட்டனர்.
அதை பார்க்க பாரதிராஜாவிற்கு தெரிந்த நபர் ஒருவர் பாரதிராஜாவையும் அழைத்து சென்றார். அங்கு சென்று படம் பார்க்கும்போது அங்கிருந்த காவலாளி பாரதிராஜாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். வெளி ஆட்களுக்கு எல்லாம் இங்கு அனுமதி கிடையாது என கூறினார். பாரதிராஜாவை அழைத்து வந்த நண்பரும் அவர் யார் என்றே தெரியாது என கை விரித்துவிட்டார்.
இந்த நிலையில் கண்ணீருடன் வெளியே சென்ற பாரதிராஜா ஒரு நாள் நீங்களே அழைக்கும் அளவிற்கு வளர்ந்து வருவேன் என சபதம் எடுத்தார். அதே போல வருங்காலத்தில் சிறந்த இயக்குனராக மாறினார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்