Connect with us

நான் எதுக்கு விஜய்யை தேடி போகணும்!.. அவர்தான் என்னை தேடி வரணும்!. கோபமான இசையமைப்பாளர் பரத்வாஜ்!..

bharatwaj vijay

News

நான் எதுக்கு விஜய்யை தேடி போகணும்!.. அவர்தான் என்னை தேடி வரணும்!. கோபமான இசையமைப்பாளர் பரத்வாஜ்!..

Social Media Bar

காதல் மன்னன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அவரது இசையில் வெளியான முதல் பட பாடலே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. காதல் மன்னன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே வெற்றியை கொடுத்தன.

அந்த படத்தின் இயக்குனர் சரணுக்கும் அதுதான் முதல் படம். இந்த நிலையில் இயக்குனர் சரணுக்கும் பரத்வாஜுக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. அதன் பிறகு சரண் இயக்கும் படம் அனைத்திற்கும் பரத்வாஜ்தான் இசையமைத்து வந்தார்.

நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவருக்கு நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார் பரத்வாஜ். காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் ஆகிய திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் பரத்வாஜ். பெரிய நடிகர்கள் பலருக்கும் பாடல் இசையமைத்தும் கூட அப்போது பிரபலமாக இருந்த விஜய் படம் ஒன்றிற்கு கூட பரத்வாஜ் இசையமைக்கவில்லை.

ஏன் அப்படி இசையமைக்கவில்லை என கேட்கும்போது அதில் எதுவும் தனிப்பட்ட விரோதம் எல்லாம் இல்லை. விஜய் என்னை அழைக்கவில்லை அவ்வளவுதான் என்கிறார் பரத்வாஜ். பொதுவாக எனது இசை மீது எனக்கு அதிக மரியாதை உண்டு.

இவ்வளவு வெற்றி பாடல்கள் கொடுக்கும்போது என்னை விஜய்தானே அவராக வந்து அழைக்க வேண்டும். ஆனால் அவர் என்னை அழைக்கவில்லை. அதனால் நானும் அவருக்கு இசையமைக்கவில்லை என கூறியுள்ளார் பரத்வாஜ்.

To Top