Connect with us

சின்ன வயசு பசங்களா இருக்கீங்க, இல்லன்னா உங்க காலில் விழுந்திருவேன்! – தனுஷ், ஜிவி பற்றி பேசிய பாரதிராஜா!

News

சின்ன வயசு பசங்களா இருக்கீங்க, இல்லன்னா உங்க காலில் விழுந்திருவேன்! – தனுஷ், ஜிவி பற்றி பேசிய பாரதிராஜா!

Social Media Bar

இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதி ராஜா இயக்கிய திரைப்படங்கள் யாவும் அவரது காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதேபோல தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனர்களை உருவாக்கிய பெருமையும் பாரதிராஜாவை சேரும்.

அவருக்குப் பிறகு வந்த பெரும் இயக்குனர்கள் பலர் பாரதிராஜாவிடம் அப்பொழுது உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுது பாரதிராஜா திரைப்படங்கள் எதுவும் இயக்குவதில்லை. கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து மட்டும் வருகிறார் பாரதிராஜா.

அவ்வளவு பெரிய இயக்குனராக இருந்த போதும் பாரதிராஜா இளைய தலைமுறைகளில் அதிக திறமை கொண்ட பிரபலங்களை பார்க்கும் போது அவர்களை மனம் விட்டு பாராட்ட தயங்குவதில்லை. தனுஷ் நடித்த தற்சமயம் வெளியான வாத்தி திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்பு திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷிற்கு தாத்தா கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருந்தார். வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசும் பொழுது தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷின் திறமையை பாராட்டி பேசி இருந்தார்.

அப்போது அவர்கள் இருவரும் திறமையான கலைஞர்கள் என்றும் அவர்கள் மட்டும் சிறு வயதினராக இல்லாத பட்சத்தில் அவர்கள் காலில் விழுந்திருப்பேன் என்றும் பாரதிராஜா கூறியிருந்தார். பொதுவாக பாரதி ராஜாவை பெரிய மனசுக்காரர் என பலரும் சொல்வதுண்டு. இந்த நிகழ்வு அதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

To Top