என் பொண்ணை பிக் பாஸ்க்கு அனுப்பி பெரிய ரிஸ்க் எடுத்துட்டேன்!.. ஓப்பனாக கூறிய வனிதா!.
Bigboss season 7: தொலைக்காட்சிகளில் பிரபலமாக உள்ள டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் வெளியான காலம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது.
பிரபலங்களை பொருத்தவரை அவர்களுக்கு தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருக்கிறது எனவே பலரும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர் ஏற்கனவே பல பேர் பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலம் ஆகி உள்ளனர்.
அதில் வனிதா விஜயகுமார் முக்கியமானவர். அதனை அடுத்து தற்சமயம் அவரது மகள் ஜோவிகாவையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளார் வனிதா. இது குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது ஜோவிகா ஏன் அமைதியாகவே இருக்கிறார் என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த வனிதா ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட ஒரு கேரக்டர் இருக்கும். நான் சத்தமாக பேசும் ஆளாக இருப்பதால் என் பொண்ணும் அப்படி இருக்க மாட்டாள் ஆனால் அவளிடம் ஒரு தனித்துவம் உள்ளது. அதை நம்பித்தான் அவளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்கிறேன்.
இல்லையென்றால் இவ்வளவு பெரிய ரிஸ்கை அதுவும் அவள் நடிகையாக ஆவதற்கு முன்பே அவளை பிக் பாஸிற்கு அனுப்பும் முடிவை நான் எடுத்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் வனிதா.
