Bigg Boss Tamil
பிக்பாஸ் சீசன் 8க்கு பிள்ளையார் சுழி போட்ட விஜய் டிவி!.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் சீரியல்களை விட பிரபலமான விஷயங்களாக அதில் வரும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அப்படியாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்படி பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறதோ அதேபோல அதிகமான ஆடியன்ஸை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.
தற்சமயம் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் துவங்கி நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் சீசன் 8-ம் தொடங்கப்பட இருக்கிறது. இதில் யார் யார் இதில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிரபலமான நிகழ்ச்சி:
ஏற்கனவே விஜய் டிவியில் இருக்கும் சில பிரபலங்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் போன பிக் பாஸ் சீசனிலே தொகுப்பாளர் மாகாபா ஆனந்தை அதில் போட்டியாளராக சேர்ப்பதற்கு பேச்சுக்கள் இருந்தன.
ஆனால் அப்பொழுது அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே சீசன் 8இல் கண்டிப்பாக அவர் இருப்பார் என்று கூறப்படுகிறது. அதைப்போல தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கும் டி.டி.எஃப் வாசன், இர்ஃபான் ஆகிய இருவரையும் பிக் பாஸ் வீட்டில் கொண்டு வருவதற்கு பேச்சு வார்த்தைகள் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

வரவேற்பை பெறும் போட்டியாளர்கள்:
மேலும் தற்சமயம் குக் வித் கோமாளியில் பிரபலமாக இருந்து வரும் ஷாலின் சோயாவும் பிக் பாஸில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை ஷாலின் சோயா பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பட்சத்தில் போன பிக் பாஸ் சீசனில் மணி , ரவீனா எப்படி இருந்தார்களோ அதே போல இந்த சீசனில் டிடிஎஃப் வாசன்னும் ஷாலின் சோயாவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நடுவே ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் எந்த போட்டியாளர்களையும் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படவில்லை இது குறித்து பேச்சு வார்த்தைகள் மட்டுமே நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
