Bigg Boss 7: இவங்க கூட யாரும் பழகக் கூடாது! முதல் நாளே 6 பேரை அனுப்பி விட்ட பிக்பாஸ்!
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முந்தைய சீசன்களில் ஒரே வீட்டில் எல்லாரும் தங்கி வந்த நிலையில் தற்போது இரண்டு வீடுகளாக பிக்பாஸ் வீடு பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளே வந்தவர்களில் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை கவராத ஆட்கள் குறித்து அவரிடம் கேட்டபோது பவா செல்லதுரை, ஐஷு, நெக்ஸன், அனன்யா, வினுஷா மற்றும் ரவீனா ஆகியோரை சொல்லியுள்ளார்.
இதனால் இந்த 6 பேரையும் பிக்பாஸ் தனி வீட்டிற்கு அனுப்பி விட்டார். இதற்கு மேல் அவர்களுக்கு எந்த அறிவிப்பும் தர மாட்டேன் என சொல்லியுள்ள பிக்பாஸ் வீட்டை விட்டு அவர்கள் வெளியவே வரக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். பிக்பாஸ் சொல்லும் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்பதால் அந்த ஆறு பேரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.