Connect with us

அஞ்ச பேரை புதுசா இறக்குறோம்… பிக்பாஸில் புது டர்னிங் பாயிண்ட்!..

kamal bigg boss

Bigg Boss Tamil

அஞ்ச பேரை புதுசா இறக்குறோம்… பிக்பாஸில் புது டர்னிங் பாயிண்ட்!..

Social Media Bar

விஜய் டிவியில் அதிகமான ரசிகர்கள் விரும்பும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்சமயம் துவங்கி இது வரை 2 எலிமினேஷன் நடந்துள்ளது. பவா செல்லதுரை தானாகவே வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இருந்தும் கூட இன்னும் அந்த நிகழ்ச்சி சூடு பிடித்ததாக தெரியவில்லை பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும்பொழுது பெரிதாக யாரும் பார்க்க மாட்டார்கள் என்றாலும் போகப்போக அதில் நடக்கும் விஷயங்கள் பலரையும் பார்ப்பதற்கு தூண்டி விடும்.

ஆனால் இந்த முறை அப்படியும் யாரும் வந்து பார்க்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியே சுவாரஸ்யம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக ஐந்து பேரை களம் இறக்குவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது.

ஏனெனில் புதிதாக இறங்குபவர்கள் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் என்பதாலும் எப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் விளையாடுகிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும் என்பதாலும் அவர்கள் தற்சமயம் உள்ள போட்டியாளர்களை விட சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த ஐந்து நபர்கள் யார் என்று இன்னும் கூறவில்லை. வருகிற 28ஆம் தேதி பிக் பாஸில் அவர்கள் வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

To Top